தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது அ.தி.மு.க வினர் தான் என்று தினகரன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மற்றவர்களை குற்றம்சாட்டியே பெயர் வாங்கும் புலவர் டி.டி.வி தினகரன் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அப்போது குறிப்பிட்டார்.