சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பெரம்பூர் நெடுஞ்சாலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 4கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ள முரசொலி மாறன் பூங்கா மற்றும் கலைஞர் நினைவு தூணை திறந்து வைத்தார். பின்னர் கவுதமபுரம் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அம்பேத்கர் கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடையை திறந்து வைத்தார். தொடர்ந்து பெரியார் நகர் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்றவர்களுக்கு மடிக்கணினி, தையல் இயந்திரம் மற்றும் பொதுமக்களுக்கு கண் கண்ணாடி, புத்தாடைகளை வழங்கினார். மேலும், பல்லவன் சாலையில் உள்ள பள்ளியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 3ஆயிரம் பேருக்கு புத்தாடை மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை வழங்கினார். தீட்டித் தோட்டத்தில் கழிவுநீர் உந்து நிலையம், ஜவஹர் நகரில் பெண்கள் உடற்பயிற்சி கூடம், நூலகம், முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன அங்காடி உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.