அரசியல்

பிரிட்டிஷ் காலத்தில் இருந்த கருத்து சுதந்திரம் தற்போது இருக்கிறதா? - வைரமுத்து கேள்வி

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பாரதிக்கு இருந்த கருத்து சுதந்திரம் தற்போது நமக்கு இல்லை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 14-வது மாநில மாநாடு புதுச்சேரியில் தொடங்கியது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் பெருமாள் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, கருத்துரிமை அடைக்கப்பட்டு கொண்டே இருந்தால் உலகத்தில் கண் திறக்காது என்றும் பிரிட்டிஷ் காலத்தில் பாரதிக்கு இருந்த கருத்துரிமை தற்போது தனக்கும் பெருமாள் முருகனுக்கு இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்