பொள்ளாச்சி அருகே பணப்பட்டி கிராமத்தில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரின் மகனும், நடிகருமான உதயநிதி கலந்துக்கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், தான் அரசியலுக்கு வந்தது தலைமை பொறுப்பை ஏற்பதற்காக இல்லை என்றும் கடைசி தொண்டனுக்கு தோள் கொடுக்க நிற்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தால், ஊழல் செய்தவர்கள் சிறை செல்வது உறுதி என்றும் அவர் கூறினார்.