சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னை ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணி பகுதிகளில், முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் மீண்டும் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என, நம்பிக்கை தெரிவித்தார். தற்போது நிலவி வரும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.