"நடிகர் விஜய் அழைத்தால், தமிழக வெற்றி கழகத்தில் சேருவேன்" என்று நடிகர் ராதா ரவி தெரிவித்துள்ளார்.
தனக்கு 40 வருட அரசியல் அனுபவம் உள்ளதாக கூறிய அவர், அரசியலே வேண்டாம் என்று விலகி விட்டதாக தெரிவித்துள்ளார். விஜய் அரசியலுக்கு வந்தது பெருமையாக உள்ளதாகவும், அவர் அழைத்தால் கட்சியில் சேருவேன் என்றும் ராதாரவி கூறினார்.