Arjunsampath | "தமிழகம் முழுவதும் TVK டெபாசிட் இழக்கும்" - ஒரே போடாக போட்ட அர்ஜுன் சம்பத் #arjunsampath #bjp #tvkvijay #tvk #vijay #thanthitv தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் டெபாசிட் இழக்கும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கன்னியாகுமரியில் திமுகவின் வாக்குகளை, தவெக சிதறடிப்பதால், குமரியின் ஆறு தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என கூறியுள்ளார். திமுகவை வீழ்த்த அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து செயல்படுவதாகக் கூறினார். மேலும், திமுக தற்போது அதிமுகவில் இருந்து சென்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், ஓ.பி.எஸ் திமுகவுடன் இணைந்தது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாக்கு செய்த துரோகம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.