"ஜெயலலிதா உட்பட பலர் 2 தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் தான்" முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பலர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் தான் என தவெக நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் விளக்கம் அளித்தார்.