கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை வீட்டிற்கு சென்று சந்திக்காத விஜய் மனிதாபிமானம் உள்ளவரா என்று அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் முதல்வர் மீதான விஜய்யின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது "விஜய் மனிதாபிமானம் உள்ளவர், நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவரா? என்று துரைமுருகன் விமர்சித்தார்.