பழனி சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக பிரவீன் குமார் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நகரச் செயலாளர் மிதுன் மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து, “அறிவிக்கப்பட்ட வேட்பாளர் யார் என்றே தெரியாது எனவும்... அவர் எந்தக் கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டதில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர் மகேஸ்வரனின் மகன் என்பதற்காகவே வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிமட்டத்தில் உழைத்த நிர்வாகிகளை தலைமை புறக்கணித்துள்ளதாகவும், தொகுதி மக்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அறிமுகமில்லாத நபருக்கு பணியாற்ற முடியாது என்றும் அவர்கள் கூறினர்.