தவெக MLA பேரம் விவகாரம் - செந்தில் பாலாஜியிடம் 5 மணிநேரம் விசாரணை தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு தொடர்பாக, திருவல்லிக்கேணி காவல்நிலையத்திற்கு கையெழுத்திட வந்த செந்தில் பாலாஜியிடம் போலீசார் 5 மணிநேரம் விசாரணை நடத்தினர்... திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் செந்தில் பாலாஜி முன்ஜாமின் பெற்றுள்ளார்... அதன்படி நேற்று காலையில் ஆஜரான அவரிடம் சுமார் இரண்டரை மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தினர்... தொடர்ந்து மாலையிலும் காவல்நிலையத்தில் ஆஜரானார்... அப்போதும் பேரம் பேசிய வழக்கு குறித்து பல்வேறு கேள்விகளையும் போலீசார் கேட்டு சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்... விசாரணை நிறைவுற்றதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை போலீசார் அனுப்பிவைத்தனர்...