அரசியல்

TVK | Poompuhar | பூம்புகார் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜயாலயனுக்கு சிறப்பான வரவேற்பு

பூம்புகார் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜயாலயனுக்கு சிறப்பான வரவேற்பு

thanthitv

பூம்புகார் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜயாலயனுக்கு சிறப்பான வரவேற்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் விஜயாலனுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து விஜயாலயன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பூம்புகார் முக்கூட்டில் வாக்கு சேகரிக்க சென்றபோது, நிர்வாகிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் மலர் தூவியும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். அப்போது திறந்த காரில் பொதுமக்கள் மத்தியில் பேசிய விஜயாலயன், பூம்புகார் தொகுதியில் நான் அல்ல, விஜய் போட்டியிடுகிறார் என நினைத்து விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூபாய் 2,500, ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள், திருமண உதவியாக 8 கிராம் தங்கம், இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

BREAKING || தேர்தல் பரபரப்புக்கு நடுவே முதல்வர் முக்கிய ஆலோசனை... திமுகவினருக்கு பறந்த மெசேஜ்

Thiruvarur | CM Stalin | DMK | TN Election | "நாங்க சும்மா இருப்போமா...?" - கர்ஜித்து பேசிய முதல்வர்

TVK Vijay Campaign | விஜய்க்கு அனுமதி.. விரைவில் வெளியாகும்?

CM Stalin | DMK | "நான்.. உங்கள் வீட்டுப் பிள்ளை.." - அதிரடியாக பேசிய முதல்வர்

DMK | CM Stalin | ஆட்டத்தை தொடங்கிய திமுக - களத்தில் முதல்வர் ஸ்டாலின்