TN Election 2026 | "தான் வெற்றி பெற்றால் மாதம் ஒருமுறை.." - உறுதியாக சொன்ன தவெக வேட்பாளர் கே.விக்னேஷ்
கோவை கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கே.விக்னேஷ், இளைஞர்கள் மற்றும் பெண்கள் பட்டாளத்துடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 'விசில்' சின்னத்திற்கு ஆதரவு திரட்டிய அவர், தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதே தனது முதல் இலக்கு என்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் கழிவறையில் தண்ணீர் இல்லாததால் வகுப்பைப் புறக்கணித்த அவல நிலையைச் சுட்டிக்காட்டி ஆளும் கட்சியினரைச் சாடினார். தான் வெற்றி பெற்றால் மாதம் ஒருமுறை மக்களை நேரடியாகச் சந்திப்பேன் என்றும், லஞ்சம் மற்றும் போதைப் பொருள் விற்பனை இல்லாத தொகுதியாகக் கிணத்துக்கடவை மாற்றுவேன் என்றும் உறுதி அளித்தார்.