அரசியல்

TVK MLA Case | தவெக MLA பெயருக்கு பதில் `வேறு பெயர்’ - நிராகரிக்கப்படும்.. நீதிபதி வார்னிங்

TVK MLA Case | தவெக MLA பெயருக்கு பதில் `வேறு பெயர்’ - நிராகரிக்கப்படும்.. நீதிபதி வார்னிங்

thanthitv

பேரம் பேசியதாக குற்றஞ்சாட்டிய தவெக MLA பெயருக்கு பதில் `வேறு பெயர்’ - வழக்கே நிராகரிக்கப்படும்.. நீதிபதி வார்னிங் பெயர் குழப்பம் - தவெக எம்.எல்.ஏ. வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவுக்கு எதிரான தேர்தல் வழக்கில், மனுவில் அவரது பெயருக்கு பதிலாக வேறு ஒருவரின் பெயர் இடம்பெற்றிருப்பதால், வழக்கை நிராகரிக்க வேண்டும் என எம்.எல்.ஏ. தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கின் கோரிக்கையில் எம்.எல்.ஏ.வின் பெயருக்கு பதிலாக வேறு நபரின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதால், அந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி சுட்டிக்காட்டினார். ஜூலை 28-ஆம் தேதிக்குள் திருத்த மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் வழக்கு நிராகரிக்கப்படும் என்றும் மனுதாரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

Gem Veeramani Issue| அம்பலமானது.. பொலிட்டிக்கல் த்ரில்லராக மாறிய `ஜெம்’ வீரமணி விவகாரம்

Chennai EB Fire | மின்சார கம்பியில் தீ - அணைக்க முயன்ற இளைஞர் பலி

JanaNayagan | CM Vijay | குண்டாஸ் ரத்து.. ஜனநாயகன் விவகாரத்தில் திடீர் திருப்பம்

Election Commission| தேர்தல் ஆணையம் உள்ளேயே வெடித்ததா பஞ்சாயத்து?

Fever | School News| "உக்கிரமாக பரவும் காய்ச்சல்.. ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டாம்" - அரசு அறிவிப்பு