Tirunelveli | TVK Vijay | TN Election | நெல்லையில் தவெக வேட்பாளர் ஆர்.எஸ். முருகன் மனுத்தாக்கல் #tirunelveli #tvkvijay #tvk #vijay #tnelection2026 #electioncommission #tnelection #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha நெல்லையில் தவெக வேட்பாளர் ஆர்.எஸ். முருகன் மனுத்தாக்கல் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் ஆர்.எஸ். முருகன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். நெல்லை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியாவிடம் வழங்கப்பட்ட இந்த மனுத்தாக்கலின் போது, கட்சியின் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் கேத்தரின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். மனுத்தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். முருகன், 'எந்தவித எதிர்பார்ப்புமின்றி மக்களுக்காகச் சேவை செய்யக் காத்திருப்பதாகவும், நெல்லை தொகுதி மக்கள் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்' என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் வரும் நாளை மறுநாள் திருநெல்வேலிக்கு வரவுள்ளதாகவும், அவரது வருகைக்காக மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுப் பிரச்சார ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.