அரசியல்

Mettupalayam | TVK Vijay| மேட்டுப்பாளையம் தொகுதியின் முக்கிய இடங்களில் தவெக வேட்பாளர் தீவிர பிரசாரம்

மேட்டுப்பாளையம் தொகுதியின் முக்கிய இடங்களில் தவெக வேட்பாளர் தீவிர பிரசாரம்

thanthitv

Mettupalayam | TVK Vijay | TN Election 2026 | மேட்டுப்பாளையம் தொகுதியின் முக்கிய இடங்களில் தவெக வேட்பாளர் தீவிர பிரசாரம் #mettupalayam #TVKVijay #tnelection2026 #thanthitv மேட்டுப்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் தீவிர பிரசாரம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் என். சுனில் ஆனந்த், பொதுமக்கள் அதிகம் கூடும் உழவர் சந்தை மற்றும் பேருந்து நிலையத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மேட்டுப்பாளையம் தொகுதியில் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், பேருந்து நிலையத்திற்குச் சென்ற தவெக வேட்பாளர் சுனில் ஆனந்த், பேருந்து பயணிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி "விசில்" சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இதனைத் தொடர்ந்து உழவர் சந்தைக்குச் சென்ற அவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்தார். "தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தவெக-விற்கு வாக்களியுங்கள்" எனக்கூறி ஆதரவு திரட்டிய அவர், அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடமும் இன்முகத்துடன் பேசி வாக்கு கேட்டார். தொண்டர்கள் புடைசூழ, மேட்டுப்பாளையம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த சுனில் ஆனந்த், தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்ததோடு, விஜய்யின் அரசியல் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

BREAKING || "இன்று கிடைத்த நீதி" - கோர்ட் வாசலில் கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஜெயராஜ் குடும்பம்

Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"

Sathankulam "தந்தை, மகனை நிர்வாணப்படுத்தி... சொல்லவே மனம் பதறுகிறது" - நீதிபதி சொன்ன வார்த்தை

BREAKING || நாடே காத்திருக்கும் சாத்தான்குளம் வழக்கு - தண்டனையை வாசிக்கும் நீதிபதி