பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருடன் சென்று தினகரன் இன்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.18 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என சென்னை உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்த நிலையில்,தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திப்பது என முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து சசிகலாவை சந்தித்து ஆலோசனை பெற உள்ளதாக கூறப்படுகிறது. பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று பகல் 12 மணிக்கு சசிகலாவை சந்திக்க தினகரன் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.