பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்கமாட்டோம் என ஸ்டாலின் சொல்ல தயாரா ? என்று தினகரன் கேள்வி எழுப்பினார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து நாகர்கோவிலில் பிரசாரம் செய்த தினகரன் அமைச்சர் பதவி தருவார்கள் என்றால் பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்கு ஸ்டாலின் தயங்க மாட்டார் என்று விமர்சித்தார். ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்பதை கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏற்கவில்லை என கூறிய தினகரன் தமிழ்நாட்டில் கூட்டணி கேரளாவில் எதிர்ப்பு என்பது ஏமாற்றும் வேலை என்றும் தெரிவித்தார்.