அரசியல்

தாஜ்மகாலை ரசித்து பார்த்த அதிபர் டிரம்ப் : காதல் சின்னத்தில் மனைவியுடன் புகைப்படம் எடுத்த ​டிரம்ப்

ஆக்ரா வரவேற்புக்கு பின், தாஜ்மகாலுக்கு காரில் புறப்பட்டார், அதிபர் டிரம்ப்.

தந்தி டிவி

ஆக்ரா வரவேற்புக்கு பின், தாஜ்மகாலுக்கு காரில் புறப்பட்டார், அதிபர் டிரம்ப். சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக அவர் கடந்து சென்றபோது, வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், தாஜ்மகால் சென்ற டிரம்ப், பார்வையாளர் பதிவேட்டில் தனது கருத்தை பதிவு செய்தார். அதன்பிறகு, தாஜ்மகாலின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து பார்த்தார். டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பாதுகாப்பு அதிகாரிகள் யாருமின்றி தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் மட்டுமே அவர்களுடன் சென்று தாஜ்மகாலை சுற்றிக் காட்டினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தாஜ்மகாலில் டிரம்ப் தம்பதி இருந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்