அரசியல்

TN Govt |Ex ministers|"முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர விரைந்து அனுமதி"தமிழக அரசு வலியுறுத்தல்

"முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர விரைந்து அனுமதி"தமிழக அரசு வலியுறுத்தல்

thanthitv

முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கும் கோப்புகளை விரைந்து பரிசீலிக்க ஆளுநரிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறையின் அனுமதி கோப்புகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இந்த கோப்புகளுக்கு விரைவில் ஒப்புதல் வழங்குமாறு ஆளுநர் அர்லேகரிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று ஆளுநரை நேரில் சந்தித்தபோது இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். போக்குவரத்துதுறையில் வேலைக்கு பணம் பெற்ற‌தாக செந்தில் பாலாஜி மீதும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த‌தாக அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்