அரசுப் பணிகள் மக்கள் விரும்பும் வகையில் சென்று கொண்டு இருப்பதாகவும், இதனை பொறுக்காமல் எதிர்க்கட்சிகள் அரசு மீது புகார் கூறி வருவதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.