"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்"
இந்த நிலையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயனை சந்திக்கவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,
நேரம் ஒதுக்கியதாகவும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை அவர் சந்திக்கவில்லை என்றும்,பாதுகாப்புத்துறை அலுவலக டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமனை சந்திக்காமல் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்றிரவு சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றார்.