சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் பொன்முடி கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர், அத்திக்கடவு அவநாசி திட்டம் முதலில், மலையில் இருந்து தண்ணீரை எடுத்து வரும் வகையில் திட்டமிடப்பட்டிருந்ததால், வனத்துறை அனுமதிக்கு கால தாமதம் ஆனதாக கூறினார். தற்போது காளிங்கராயன்பாளையத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்தார்.