அதிமுகவுக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்களை அழைத்துச் சென்ற செந்தில்பாலாஜி, திமுகவில் இணைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து வாக்கு கேட்ட அவர், கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் காணாமல் போய்விடுவர் என்றார்.