அரசியல்

TN Budget 202|மகளிருக்கு `இலவசமாகவே’வழங்கப்படும் என அறிவிப்பு - யாருக்கு கிடைக்கும்? தகுதி என்ன?

TN Budget 202|மகளிருக்கு `இலவசமாகவே’வழங்கப்படும் என அறிவிப்பு - யாருக்கு கிடைக்கும்? தகுதி என்ன?

thanthitv

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள புதிய அறிவிப்புகள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.... தகுதியுள்ள மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கு 812 கோடி ரூபாயும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு 560 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மகப்பேறு காலம் நெருங்கிய தாய்மார்களுக்கு இலவச உணவு மற்றும் மருத்துவ ஆதரவோடு தங்குவதற்கு 'தாய் கேர்' மையங்கள் ₹ 23 கோடியில் அமைக்கப்படுகின்றன. மேலும், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 30,000 பேரின் வாழ்வாதாரத்தை பெருக்க 100 சதவீதம் மானியத்தில் ஆடுகள் வழங்கும் 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம் 110 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது ​அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காலை உணவு திட்டம் 710 கோடி ரூபாயில் விரிவுபடுத்தப்படுகிறது. கிராமிய விளையாட்டுகளை மீட்டெடுக்க 42 கோடி ரூபாயும், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இலக்கோடு 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க 50 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. ​14.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்க புதிய கால்நடை காப்பீட்டு திட்டத்திற்கு 31 கோடி ரூபாயும், பதநீர், கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய தமிழ்நாடு பனை மேம்பாட்டு கழகத்திற்கு 16 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. ​500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கான இலவச மின்சாரம் 100 யூனிட்டில் இருந்து 200 யூனிட் ஆக உயர்த்தப்பட்டு, அதற்கு 1,545 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் 33 கோடி ரூபாயில் தொடங்கப்படுகின்றன. சென்னையில் 1,000 புதிய குளிர்சாதன மின்சார பேருந்துகள் 500 கோடி ரூபாயில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ​மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன AI செயற்கை கை, கால்கள் வழங்க நிதியுதவி அளிக்கப்படும். மேலும், திருக்கடையூர், நாகூர், வேளாங்கண்ணி ஆகிய ஆன்மீக தலங்களில் ஆன்மீகப் பயணிகள் ஓய்வு இல்லங்களை அமைக்க 60 கோடி ரூபாயும், பாரம்பரியக் கலைகளை வாழ வைக்கும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ₹23 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு