திருக்கோவிலூர் அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவல் கோதண்டராமனின் உடலுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிதி பற்றாக்குறை என கூறிக்கொண்டே புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.