அரசியல்

எம்.எல்.ஏ. கைது - சட்டமன்ற விதிகள் என்ன?

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், கைது குறித்து சபாநாயகர் தனபாலிடம், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர்.

தந்தி டிவி

* சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டால், சட்டமன்ற விதி 288, 289-ன் கீழ், அதற்கான காரணம், என்ன வழக்குகள் போடப்பட்டுள்ளன, அவர் எந்த சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்களை, சபாநாயகரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

* அதன் அடிப்படையில் கருணாஸ் கைது தொடர்பான விளக்கங்களை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நாளை சபாநாயகர் தனபாலிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளனர்.

* பின்னர் சபாநாயகரின் ஒப்புதலை பெற்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கருணாஸ் கைது குறித்து தகவல் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

* சட்டப்பேரவை கூடியிருக்கும் வேளையில் கைது நடந்தால், சட்டப்பேரவையிலே தெரிவிக்கப்படும் என்றும், சட்டப்பேரவை கூடாத நிலையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தபால் மூலமாகவோ, செய்திக் குறிப்பு மூலமாகவோ தெரிவிக்கப்படும் எனவும் சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்