அரசியல்

Tirupati | சுதந்திர தின விழா மேடையில் ஆந்திர அமைச்சர் திடீரென மயக்கம்.. பரபரப்பு

Tirupati | சுதந்திர தின விழா மேடையில் ஆந்திர அமைச்சர் திடீரென மயக்கம்.. பரபரப்பு

thanthitv

Tirupati | சுதந்திர தின விழா மேடையில் ஆந்திர அமைச்சர் திடீரென மயக்கம்.. பரபரப்பு திருப்பதியில் நடைபெற்ற சுதந்திர தின விழா மேடையில் பேசிக்கொண்டிருந்த ஆந்திர அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி திடீரென மயக்கம் அடைந்த‌தால் பரபரப்பு ஏற்பட்ட‌து.. திருப்பதி காவல் மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆந்திர அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மேடையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகச் உரையாற்றிக் கொண்டிருந்த அமைச்சர், திடீரென இரத்த அழுத்தம் (BP) குறைந்ததால் மயங்கிச் சாய்ந்தார். அப்போது, அருகில் இருந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு அமைச்சரைப் பிடித்து அசம்பாவிதத்தைத் தடுத்தனர். மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக மேடையிலேயே முதலுதவி சிகிச்சை அளித்தனர். அமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து, அனைவரும் நிம்மதியடைந்தனர்.

CM Vijay | Thalapathy Vijay Road | 'தளபதி விஜய்' சாலை - CM விஜய்க்கு நன்றி சொன்ன மக்கள்

Minister Rajmohan | CM விஜய் குறித்து நயினார் விட்ட வார்த்தை - கொதித்த அமைச்சர் ராஜ்மோகன்

Chennai +2 Student Death case | திருவொற்றியூர் +2 மாணவன் அடித்துக்கொ*ல - சக மாணவர்கள் 4 பேர் கைது

Perambur | ATM cash | ATMக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் பெட்டி மாயம்..பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

CM Vijay | MLA | TN Assembly | எம்எல்ஏக்களுக்கு கார்? CM விஜய்யின் அதிரடி முடிவு