கர்நாடகாவின் ஹூப்ளி நகரில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு மாநாட்டில் பேசிய அவர், தேர்தல் வரும் போது அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என கூறினார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வரும் தலித்துகளுக்கு எதிராக இருப்பதால் உங்களுக்கு என்ன பயன்? என்றும் எதிர்க்கட்சிகளை நோக்கி அவர் கேள்வி எழுப்பினார். மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பல்வேறு விமர்சனங்களை, இந்த கூட்டத்தில் அமித்ஷா முன்வைத்தார்.