அரசியல்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறுமா..?

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் நடத்தப்படுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

தந்தி டிவி

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் நடத்தப்படுவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஏ.கே. போஸ் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து. அத்தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில், ஏ.கே. போஸ்ஸை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன்,கடந்த மாதம் 7ம் தேதி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக அப்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 116- ன்படி தொகுதி தொடர்பாக வழக்கு இருக்கும்போது, அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மறைந்தால், நிலுவையில் உள்ள அந்த வழக்கு தொடர்பாக அரசிதழ் மற்றும் செய்தித்தாள்களில் அறிவிப்பு செய்த பிறகே, தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த நடைமுறைகளை பின்பாற்றாமல் தேர்தல் ஆணையம் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ் மறைவைத் தொடர்ந்து, தொகுதி காலியானதாக அறிவித்திருப்பது மக்கள் பிரதி நிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 116ன் மீறியாக செயலாகும் என்றும் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனின் இந்த புகார் மனுவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் உருவாகி யுள்ளதுடன், இடைத்தேர்தல் மேலும் தள்ளி போக கூடும் என அரசியல் வட்டாரத்தில், கருத்து நிலவுகிறது.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்