உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அவசர சட்டம் ஆளும் கட்சியின் அச்சத்தை வெளிப்படுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தலைவர் பொறுப்புகளுக்கு நேரடித் தேர்வுக்கு பதிலாக கவுன்சிலர்கள் மூலம் மறைமுகத் தேர்தல் நடத்தும் வகையில் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கும் ஆள்கடத்தல் உள்ளிட்ட குதிரை பேர நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் வழிவகுக்கும் என்றும் இதனை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.