அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்
பேசிய அவர், பகவத் கீதையை பாடத்தில் இணைத்தது பாஜகவின்
நீண்ட நாள் கனவு திட்டங்களில் ஒன்று என்றும், விரைவில் ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றையும் பாடத்திட்டத்தில் கொண்டு வருவார்கள்
என்றும் குற்றம் சாட்டினார். நியூயார்க் மாநாட்டில் 24 நாடுகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டதாக திருமாவளவன் தெரிவித்தார்.