அரசியல்

"தமிழர்களே இல்லாத நிலை ஏற்படும்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேதனை

தந்தி டிவி

யுபிஎஸ்சி தேர்வில் தமிழர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளதால், அரசு உயர் பதவிகளில் தமிழர்களே இல்லாத நிலை ஏற்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், போட்டித் தேர்வு பிரிவின் குடிமைப் பணியின் முதல் நிலை தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடைப்பெற்றது. அப்போது, ஆயிரம் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 7 ஆயிரத்து 500 வழங்கும் திட்டத்தை உதயநிதி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், குடிமைப்பணி தேர்வுகளில் 10 விழுக்காடாக இருந்த தேர்ச்சி, 2016ஆக்குப் பிறகு 5 விழுக்காடாக குறைந்துள்ளது என வேதனை தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்