அரசியல்

PM Modi | France | இந்தியா & பிரான்ஸ் கூட்டாக செய்யப்போகும் மாஸ் சம்பவம் | உலகுக்கே சொன்ன PM மோடி

இந்தியா & பிரான்ஸ் கூட்டாக செய்யப்போகும் மாஸ் சம்பவம்

thanthitv

PM Modi | India | France | இந்தியா & பிரான்ஸ் கூட்டாக செய்யப்போகும் மாஸ் சம்பவம் | உலகுக்கே சொன்ன PM மோடி #PMModi #EmmanuelMacron #India #France #H125Helicopter #Thanthitv இந்தியா - பிரான்ஸ் இடையே இரட்டை வரி நீக்கம் - பிரதமர் மோடி இந்தியா பிரான்ஸ் இடையே பரஸ்பர முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் இரட்டை வரி விதிப்பு நீக்கம் செய்யப்படும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மும்பையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் உடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர் , பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பில் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என தெரிவித்தார். இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து மருத்துவம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு மையங்களை தொடங்க இருப்பதாகவும், விமானத் துறையில் திறன் மேம்பாட்டிற்கு நிறுவனங்கள் மற்றும் புதிய மையங்கள் உருவாக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து செயல்படுவது உலக நிலைத்தன்மையை மேம்படுத்தும் என்றும், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்திற்கு பறக்கும் திறன் கொண்ட உலகின் ஒரே ஹெலிகாப்டரான H125 ஹெலிகாப்டரை இந்தியாவில் இரு நாடுகளும் கூட்டாக இணைந்து தயாரிப்பதில் பெருமை கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Emmanuel Macron | பிரான்ஸ் அதிபரை கொல்ல முயற்சி? - சிரியாவில் வைத்தே கதை முடிக்க சதி?

Chennai | Farmers Protest | குவிந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் | சென்னையில் திடீர் பரபரப்பு

Wayanad Landslide | Death Toll | கடவுள் தேசத்தில் மீண்டும் நேர்ந்த கோரம் | வெளியான ஷாக் தகவல்

Anywhere Registration | ``இடைத்தரகர்களை அனுமதிக்க மாட்டோம்.. ஆகஸ்ட் 17 முதல் அனைத்தும் ஆன்லைன்’’

Breaking | CJP | Delhi | கரப்பான்பூச்சி கட்சிக்கு கிடைத்த வெற்றி | டெல்லி ஹைகோர்ட் அதிரடி உத்தரவு