#deepathooncase #tvkvsbjp தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த, மாநில அரசு தேவையான நிலங்களைக் கையகப்படுத்தித் தர வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார். சென்னை தியாகராயர் நகரில் பாஜக சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக 4 ஆயிரத்து 800 ஹெக்டேர் நிலம் தேவைப்படும் நிலையில், இதுவரை ஆயிரத்து 253 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மத்திய அரசு ஒரு அடி எடுத்து வைத்தால், மாநில அரசும் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 870 கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மதுரையில் தீபம் ஏற்றுவதை மாநில அரசு தடுத்து நிறுத்தியதாகக் குற்றம்சாட்டிய அவர், இன்று தீபம் ஏற்றுவதைத் தடுப்பவர்கள், நாளை கோயிலுக்குச் செல்லக்கூடாது என்றும் கூறுவார்களா என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளதாகவும், சென்னை - பெங்களூரு இடையே 73 நிமிடங்களில் பயணிக்கும் வகையில் Bullet Train திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்