அரசியல்

மெரினாவில் காண்போரை உருக்கிய நிகழ்வு.. முதல்வரை காண வந்த பார்வையற்ற தம்பதி - CM கார் வந்ததும்... கோடி இன்பம் முகத்தில்

தந்தி டிவி

மெரினாவில் காண்போரை உருக்கிய நிகழ்வு.. முதல்வரை காண வந்த பார்வையற்ற தம்பதி - CM கார் வந்ததும்... கோடி இன்பம் முகத்தில்.

சென்னைக்கு வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் சத்தத்தைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த சம்பவம், உருக்கத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் எ.வெள்ளோடு கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி அருள்ராஜ்-கீதா... சென்னை சாலைகளில் பாடல் பாடியும், ஊதுபத்தி விற்றும் பிழைப்பு நடத்தி வரும் இவர்கள், மெரினாவிற்கு வந்த முதலமைச்சரின் கார் சத்தத்தை மட்டும் கேட்டுவிட்டுச் சென்றுவிடுவதாக காவலர்களிடம் கூறி உள்ளனர். முதலமைச்சர் அந்த வழியாக சென்றபோது பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி, கார் சத்தத்தை கேட்டு பூரிப்படைந்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்து தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்