அரசியல்

Rahul Gandhi | சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. தமிழகத்தில் இறங்கி ஆட்டத்தை ஆரம்பிக்கும் ராகுல்காந்தி

சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. தமிழகத்தில் இறங்கி ஆட்டத்தை ஆரம்பிக்கும் ராகுல்காந்தி

thanthitv

TN Election 2026 | Rahul Gandhi | சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. தமிழகத்தில் இறங்கி ஆட்டத்தை ஆரம்பிக்கும் ராகுல்காந்தி #tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha தமிழகத்தில் தேர்தல் களம் அனல் பறந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி நாளை தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். காலை 11:10 மணி அளவில் தனி விமானம் மூலம் சென்னை வரும் ராகுல்காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாகப் பொன்னேரி சென்றடைகிறார். மதியம் 12:40 மணி வரை பொன்னேரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர், அதனைத் தொடர்ந்து மதியம் 1:25 மணிக்கு சோளிங்கரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்குச் சேகரிக்கிறார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு, மதியம் 3:45 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் துறையூர் செல்லும் ராகுல்காந்தி, மாலை 4:15 மணி முதல் 5 மணி வரை துறையூரில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். பிரச்சாரங்களை முடித்துவிட்டு, நாளை இரவு 8:30 மணி அளவில் திருச்சியிலிருந்து மீண்டும் தனி விமானம் மூலம் அவர் டெல்லி புறப்படுகிறார். ராகுல்காந்தியின் இந்த வருகை தமிழக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DMK | யாரும் எதிர்பாரா நேரத்தில் நாடாளுமன்றத்தில் திமுகவின் `மாஸ்டர் ஸ்ட்ரோக்’

EPS | ADMK | "செங்கோட்டையன் இருக்கும்வரை..." - சட்டென டோனை மாற்றி ஈபிஎஸ் சொன்ன வார்த்தை

Breaking | Gold Rate | சற்று தணிந்த போர் சூழலில்.. சடாரென ஜம்ப் அடித்த தங்கம் விலை

TVK Campaign | அனுமதி கிடைத்தபின் `ரத்து’ செய்த தவெக - தொண்டர்கள் ஏமாற்றம்

TVK | விஜய்க்கு 3வது `க்ரீன் சிக்னல்’ - இந்தமுறை பெரும் ஏக்கத்தோடு எதிர்பார்க்கும் தொண்டர்கள்