அரசியல்

Nirmalasitharaman | "பொருளாதாரம் மிகவும் சரியான.." - நாடாளுமன்றத்தில் பெருமையாக சொன்ன நிதியமைச்சர்

"பொருளாதாரம் மிகவும் சரியான.."

thanthitv

இந்தியப் பொருளாதாரம் தற்போது மிகவும் சரியான, நிலையான வளர்ச்சியை அடைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய அவர், மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுவதாகப் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், மாநிலங்களின் ஒத்துழைப்புடன் 'சுயசார்பு இந்தியா' என்ற இலக்கை நோக்கி தடம் பதிப்போம் என்றும் உறுதியளித்தார். 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதையும், பணவீக்கம் 2 சதவீதம் என்ற அளவிற்கு குறைந்து கட்டுக்குள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்... அதிக வளர்ச்சியும், குறைவான பணவீக்கமும் ஒரே நேரத்தில் நிகழும் இந்த அரிய நிலையை அவர் "கோல்டிலாக்ஸ் தருணம்" என்று குறிப்பிட்டார். கல்வி-வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு தொடர்பான உயர் அதிகாரக் குழு அமைக்கப்படும் என்றும், 2047-ம் ஆண்டிற்குள் உலகளாவிய சேவை துறை சந்தையில் 10 சதவீத பங்கைப் பிடிப்பதே இந்தியாவின் இலக்கு என்றும் தெரிவித்தார்.

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

Election Commission | தமிழகத்திற்கு மட்டும் 151 பேர்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு

DMK | CPM | Election 2026 | திமுக வைத்த கோரிக்கை.. ``ஏற்க முடியாது’’ - சிபிஎம் அதிரடி முடிவு