AIADMK | Ravi Mariya | அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபலம்..மணலியில் உற்சாக வரவேற்பு #AIADMK #RaviMariya #Kuppan #Thiruvotriyur சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குப்பன், அந்த தொகுதியில் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி வேட்பாளர் குப்பன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இவருக்கு ஆதரவாக பிரபல இயக்குனரும், நடிகருமான ரவி மரியா பிரசாரம் மேற்கொண்டார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் வேட்பாளருக்கும், நடிகர் ரவி மரியாவுக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறிய ரவி மரியா, குப்பனுக்கு பெருவாரியான வாக்குகள் அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.