மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தமிழக கோயில்களுக்குள் உள்ள கடைகளை அகற்ற இந்து அறநிலையத் துறை உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து கடையின் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், கோயிலில் உள்ள கடைகளை அகற்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கினார். மாற்று இடம் கோரி அடுத்த 4 வாரத்திற்குள் கடையின் உரிமையாளர்கள் விண்ணப்பித்தால், அதை அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.