அரசியல்

தமிழகம் முழுவதும் கட்டுக்கட்டாக சிக்கிய ரூபாய் நோட்டுகள்... அதிரடி காட்டிய பறக்கும் படை

தந்தி டிவி

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த 24 மணி நேரத்தில், 21 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அருணா தெரிவித்துள்ளார்.

குளித்தலை, கரூர்

கரூர் மாவட்டம் குளித்தலையில், சரக்கு வாகனங்கள் மற்றும் பால் வேனில் எடுத்து செல்லப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலப்பாக்கம்,

சென்னை ஆலப்பாக்கம் பகுதியில் பறக்கும் படையின் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வேனில் எடுத்து செல்லப்பட்ட 1 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சங்கரன்கோவில், தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ராதாகிருஷ்ணன் என்பவர் கொண்டு வந்த 62 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ராதாகிருஷ்ணன், தன்னையும் வீடியோ எடுக்குமாறு கூறி போஸ் கொடுத்தார். இது அதிகாரிகளிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Kodaikanal | Tourists |கோடையில் ஸ்தம்பித்த கொடைக்கானல்.. பலமணிநேரம் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்

BREAKING || கோவை சிறுமி பெற்றோருக்கு போன் போட்ட CM விஜய் - கொடுத்த உறுதி

🔴LIVE: CM Vijay | கோவை சிறுமி குடும்பத்திற்கு போன் போட்டு பேசிய CM விஜய்

Chennai | Electricity Issue | சென்னையில் பகலிலும் மின்தடை - பொதுமக்கள் கடும் அவதி

Trichy Nurse Issue | செவிலியர் மாணவி உயிரிழந்த விவகாரம் - `இறுதி அறிக்கை..' - அதிரடி உத்தரவு