அரசியல்

ஓட்டு கேட்க சென்ற வேட்பாளரை குத்தி குடலை சரித்த பயங்கரம் - ஒரு மாநிலமே பெரும் பதற்றத்தில்..

தந்தி டிவி

தெலங்கானாவில் ஓட்டுக்கேட்டு போன வேட்பாளரை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் மக்களவை உறுப்பினர் பிரபாகர் ரெட்டி துப்பாக் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். சுராம்பள்ளி கிராமத்தில் வாக்கு சேகரித்துக் கொண்ட பிரபாகர் ரெட்டியை மர்ம நபர் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் வயிற்றில் காயம் அடைந்த பிரபாகர் ரெட்டி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கத்தியால் குத்திய நபரை மடக்கி பிடித்த கட்சி தொண்டர்கள் அவரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தெலங்கானா தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்