#anbilmaheshcaseupdate #anbilmahesharrest திமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படும் சதீஷ்குமாரின் மாற்றுப்பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வந்த சதீஷ்குமார், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் சிறார் மற்றும் ஆசிரியர் இதழ்களுக்கான ஒருங்கிணைப்பாளராக மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டிருந்தார். அன்பில் மகேஷ் பங்கேற்கும் அரசு மற்றும் இதர நிகழ்ச்சிகளை முன்னின்று ஒருங்கிணைத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிறார் மற்றும் ஆசிரியர் இதழ்களுக்கான ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து சதீஷ்குமார் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மீண்டும் மேற்பனைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.