அரசியல்

ஒரே நாளில் 141 புகார்கள் - தலைமை தேர்தல் அதிகாரி சொன்ன தகவல்

தந்தி டிவி

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்காக 68 ஆயிரத்து144 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக கூறினார்.

டிசம்பர் மாதத்திற்கு பின்,90 ஆயிரம் முதல் வாக்காளர்கள் சேர்ந்துள்ள நிலையில், 18-19 வயதுடைய வாக்காளர்கள் மொத்தம் 10 லட்சத்து 45 ஆயிரத்து 470 பேர் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சி விஜில் செயலி மூலம் நேற்று ஒரே நாளில் 141 புகார்கள் பெறப்பட்டுள்ளதோடு, அதிகபட்சமாக சென்னையில் 21 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார். சுவர் விளம்பரம் சம்பந்தமான புகார்களே அதிகம் பெறப்பட்டுள்ளன குறிப்பிட்டார்.

மக்களவைத் தேர்தல் செலவிற்காக அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளதாக கூறிய சாகு,

எம்.பிக்கள் தேர்தல் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ