அரசியல்

"தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு எதிர்கட்சிகளே இல்லை" - அமைச்சர் ஓ.எஸ். மணியன் பெருமிதம்

"தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு எதிர்கட்சிகளே இல்லை" - அமைச்சர் ஓ.எஸ். மணியன் பெருமிதம்

தந்தி டிவி

தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு எதிர்கட்சிகளே இல்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே எம்.ஜி.ஆர். அரசு கலைக்கல்லூரியின் கட்டுமானப்பணிகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணை நீர்மட்டம் 80 அடியை எட்டினால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்பதை அறியாமல், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் வெளிநடப்பு செய்வதாக குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தனித்து வெற்றி பெற்றதால் அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சியே இல்லாத நிலை ஜெயலலிதாவால் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்