அரசியல்

விவசாயிகளுக்கு ஆதரவாக விரைவில் போராட்டம் : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

காவிரி கடைமடை பகுதி வரை, தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

தினமும் 2 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை என அறிக்கை யொன்றில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதைபார்க்கும் போது, அதிமுக அரசு நீர் மேலாண்மையில் எப்போதும் எவராலும் மன்னிக்க முடியாத படுதோல்வியை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். எனவே, கடைமடை வரை தண்ணீர் சென்று சேரும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''