அரசியல்

"சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் சாதிக்க உதவி" - அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் சாதிக்க தேவையான உதவிகள் வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை அடையாறிலுள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில், மாநில அளவிலான 11வது, வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 369 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீரங்கனைகளுக்கு விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வெல்வதே லட்சியம் எனவும், வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற விரைவில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.வில்வித்தையில் தமிழகம் ஒலிம்பிக்கில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி 5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்