அரசியல்

வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி: அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம்

நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எப்போதும் மக்களின் நினைவில் இருப்பார் என அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தந்தி டிவி

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அதிமுக சார்பில் அமைச்சர் டி. ஜெயக்குமார், திமுக சார்பில் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதேபோல, தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் தாமோதரன், த.மா.கா மூத்த தலைவர் ஞானதேசிகன், பாமக தலைவர் ஜி.கே.மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய வாஜ்பாய் அவர்கள் என்றும் நமது நினைவில் இருப்பார் என்று குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்