தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடக்கும் இந்தக் கூட்டத்தில், வரும், 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்தும், தொழில் தொடங்க இசைவு தெரிவிக்கும் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. ஸ்டெர்லைட் ஆலை குறித்து கொள்கை முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, கடந்த 2015-ம் ஆண்டு, முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.