அரசியல்

டாக்டர் தமிழிசை சிறந்த அறிவாளி - பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

யார் சிறந்த அறிவாளி - யார் நல்ல அரசியல்வாதி என்பதை பார்க்க நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? என தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை விடுத்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி

தந்தி டிவி

டாக்டர் தமிழிசை சிறந்த அறிவாளி - அன்புமணி

யார் சிறந்த அறிவாளி - யார் நல்ல அரசியல்வாதி என்பதை பார்க்க நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா? என தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் விடுத்த சவாலை பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ஏற்றுக்கொண்டுள்ளார். சேலத்தில் நடைபெற்ற மக்கள் கருத்து கேட்பு நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வருகிற 29 ம் தேதிக்கு பிறகு எங்கு வேண்டுமானாலும் விவாதம் நடத்த தயார் என்றார்.

"தமிழிசை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்"

30 ஆண்டுகளுக்கு முன்பு இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒரு சமுதாயத்தை டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் இழிவு படுத்தி பேசி விட்டதாக அவர் குற்றஞ் சாட்டினார். புனிதமான போராட்டத்தை கொச்சை படுத்தி விட்டதாக கூறிய அவர், இதற்காக டாக்டர் தமிழிசை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். பாமக சார்பில் நாளை வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் டாக்டர் தமிழிசை சவுந்திராஜனை கண்டித்து தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும் என்றும் டாக்டர் அன்புமணி தெரிவித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு